Saturday 1 February 2014

உதயேந்திர சிம்மன் 708 A.D - 790 A.D

பல்லவ அரசன் நந்தி வர்மன் பல்லவ மல்லனுடைய ஆட்சியின் இருபத்தோராம் ஆண்டிலே அவனுடைய படைத் தலைவனும் பூசன் குலத்தில் பிறந்த வேகவதியின் கரையிலுள்ள வில்வல நகரத்து குரு நில மன்னன் உதயேந்திர சிம்மன். வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் கிடைத்த உதயேந்திரம் செப்பேடுகள்வ ஆகும்.உதயேந்திரன் செப்பேடுகளில் குறிக்ப்பெறும் உதயேந்திர சிம்மன் 'பூசன்' கூட்டத்தைச் சார்ந்தவராக இச் செப்பேடு கூறுகிறது. பூசன் மாற்றுத்துறை என்பது போர் முறைகளுள் ஓன்று. உதயேந்திர சிம்மன் விண்ணப்பம் செய்ததைக் குறிப்பிடும் இடத்தில் அவன் தன் அரசனுக்கு ஆற்றிய பணிகளும் விரிவாகக் கூறப்படுகின்றன.எதிரிகளிடமிருந்து நாட்டை மீட்டுப் பல்லவ சிங்காதனத்தில் நந்திவர்மனை நிலைநிறத்தியவன் அவனே.அவனுடைய வேண்டு கோளின்படி பச்சிமாச்சரிய நதி விஷயத்தில் குமாரமங்கல வெள்ளாட்டூர் என்ற கிராமத்தை , கொற்ற கிராமம் என்ற ஊரில் இரண்டு ஜலயந்திரங்களோடு,உதயசந்திரமங்கலம் என்று புதுப் பெயரிட்டு நூற்றெட்டுப் பிராம்மணர்களுக்கு அளித்த செய்தி காணப்படுகிறது. அளிக்கப்பெற்ற கிராமத்தின் நான்கு எல்லைகள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.அதர்ம காரியங்களைச் செய்யும் வேற்றேரை நீக்கி,அந்த ஊர் அளிக்கப்பட்டது என்ற விவரமும் கூறப்பட்டுள்ளது.தானம் பெற்றவர்களின் விவரமும் விரிவாகக் காணப்படுகிறது.முடிவிலே ,சந்திரன் நட்சத்திரம் உள்ளளவும்,வானத்திலே சூரியன் சுற்றும் வரையிலும் ,மலை உள்ளளவும் பூசன் வம்சம் நிலைத்திருக்க வேண்டும்மென்று வாழ்த்துக் கூறப்பட்டிருக்கிறது.மேதாவி குலத்தில் பிறந்த சந்திரதேவன் மகன் பரமேச்வரன் என்னும் கவி அந்தப் பிரசஸ்தியை எழுதியதாகக் கூறும் செய்தியோடு சாசனம் முடிவடைகிறது. உதயேந்திர சிம்மன் சிற்பம் டாக்டர் மீனக்ஷி "காஞ்சி வைகுண்டப்பெருமாள் கோயிலில் காணும் வரலாற்றுச் சிற்பங்கள்" என்ற தொல்லியல் அய்வு நூல்லில்,உதயேந்திர சிம்மன் சிற்பம் விவரிக்கபட்டுள்ளது. 14-ஆம் கட்டத்தின் ஒரு பகுதியும் 15-ஆம் கட்டம் முழுவதும் இந்த நிகழ்ச்சிகளை(ஆதாவது பல்லவ மல்லனை உதயேந்திர சிம்மன் நந்திபுரம் முற்றுகையிலிருந்து மீட்ட நிகழ்ச்சியை)ச் சித்திரிப்பவைகளாக உள்ளன. "இவர்களுக்குப் பின்புறமாக மேலும் மூவர் நின்று கொண்டிருக்கிறார்கள்.அடிப் பகுதியில் முன் கட்டத்தைச் சேர்ந்த போர் வீரர்களில் ஜவர் அணிவகுத்துச் செல்வதே போல் உள்ளனர்.அழகனகவும் இளைஞனகவும் குதிரை மீது அமர்ந்து செல்லும் அவ்வீரன் உதயேந்திர சிம்மன் போலும்.போட்டியிடும் சித்திர மாயனுடைய சேனையை எதிர்த்துச் செல்வது போலக் காண்கிறன் அவன் ஆதாரம் பல்லவர் செப்பேடு http://www.scribd.com/doc/129542275/Pucan-Uthenyandra-Simman-Source