Saturday 1 February 2014

பூசன் குலம்

பூசன் கூட்டம் என்பது போர் இலக்கணத்தை தழுவிஏற்பட்ட பெயராகும். "பூசன் மாறறு" என்பதற்கு நிரைகவர்ந்த வெட்சியார்(வெட்சிப் பூ குடிக்கொண்டு ஆதிரைகளைக்கவர்வோர்)அதனை மீட்க வந்த கரந்தையரை(கரந்தைப் பூ சூடியோர்) போரில் அழித்தமை கூறும் புறத்துறையாகும் என்று போர் இலக்கணம் கூறுகிறது. கால்நடைகளைக்கவர்தல் பற்றியும் ,அதனை மீட்பது பற்றியும் சங்க நூல்களில் செய்திகள் காணக் கிடைக்கிடைறன.எனவே,இத்தகைய போர் முறையில் பயிற்சி மிக்கவர்கள் என்ற அடிப்படையில் பூசகுலத்தினருக்கு இப்பெயர் ஏற்பட்டது களப்பிரர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பறியபோது தொண்டைமானுக்கு ஆதரவாக போருக்குச்குச்சென்ற மூவேந்தர்களை களப்பிரர்கள் தோற்கடித்து ஆமுர் சிறைக் கூட்டாத்தில் அடைத்து விட்டனர். அப்போது சோழ வள நாட்டில்ச் சீர்காழியில் வாழ்ந்து வந்த பூச குலத்தினர் படை திரட்டிச் சென்று ஆமுர் சிறையைத் தகர்த்து மூவேந்தர்களை விடுதலை செய்தனர்.தொண்டைமானை மீண்டும் தொண்டை மண்டலத்திற்கு அரசனாக்கினர் இதனால், பூச குலத்தினருக்கு தொண்டைமான் பட்டம் வழங்கப்பட்டது.இச்செய்தி வாலசுந்தரக் கவி பாடிய கொங்கு மண்டல சதகத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பூச குலத்தானின் வீரத்தை மெச்சி வாதமரு(பகதூர் )என்ற பட்டம் கொடுத்தார்.எனவே,தொண்டைமான் அச்சுதராயர் பெயரால் வழங்கப்பட்ட அச்சுதத் தொண்டைமான் என்ற பெருமைப் பட்டத்தை பூசர்கள் தங்கள் பெயறுடன் இணைத்துக் குறித்துக் கொள்கின்றனர்.இதனை, ‘சொல்லாண்மை திழ் சொற்றிடும் பூசர்’ எனவும் சொற்புகழ் மூலனூர்பூச குலன் வாதுரு தொண்டைமான் கொடுத்தது துணிந்து பார்சிங்கா ‘ என்ற அலகுமலைக் குறவஞ்சி சிறப்பிக்கின்றது. பூசன் குலத்தினர் 1798 இல் ஆங்கிலத் தளபதிக்கு 150 வீரர்களை அளித்தார்களாம் . ஆவணம் கூறுகிறது . மூலனூர் , பொருளூர், புதுப்பை, பகுவாய், அழகாபுரி பெற்றப்பள்ளி , தொண்டாம் முத்தூர் ஆகியன பூசன் குலத்தாரின் காணியூர்களாம். பெரிய புராணத்தில் பூசலார் புரணாம் இருப்பதை அறியலாம் . பொருளூர், மூலனூர் , புதுப்பை வாழ் பூசர்கள் மூவரும் சேர்ந்து உருவாக்கிய தொண்டைமான்புத்தூர் தற்போது தொண்டாமுத்தூர் எனபொயர் பெற்று வழங்குகிறது