Sunday 2 February 2014

உதயேந்திர சிம்மன் சிற்பம்

உதயேந்திர சிம்மன் சிற்பம் டாக்டர் மீனக்ஷி "காஞ்சி வைகுண்டப்பெருமாள் கோயிலில் காணும் வரலாற்றுச் சிற்பங்கள்" என்ற தொல்லியல் அய்வு நூல்லில்,உதயேந்திர சிம்மன் சிற்பம் விவரிக்கபட்டுள்ளது. 14-ஆம் கட்டத்தின் ஒரு பகுதியும் 15-ஆம் கட்டம் முழுவதும் இந்த நிகழ்ச்சிகளை(ஆதாவது பல்லவ மல்லனை உதயேந்திர சிம்மன் நந்திபுரம் முற்றுகையிலிருந்து மீட்ட நிகழ்ச்சியை)ச்
சித்திரிப்பவைகளாக உள்ளன. "இவர்களுக்குப் பின்புறமாக மேலும் மூவர் நின்று கொண்டிருக்கிறார்கள்.அடிப் பகுதியில் முன் கட்டத்தைச் சேர்ந்த போர் வீரர்களில் ஜவர் அணிவகுத்துச் செல்வதே போல் உள்ளனர்.அழகனகவும் இளைஞனகவும் குதிரை மீது அமர்ந்து செல்லும் அவ்வீரன் உதயேந்திர சிம்மன் போலும்.போட்டியிடும் சித்திர மாயனுடைய சேனையை எதிர்த்துச் செல்வது போலக் காண்கின்றான். நன்றி கவியரசு

பூசன் குல உதயேந்திர சிம்மன் ஆதாரம்

ஆதாரத்துடன் இன்னும் பல தகவல்கள் படிக்க

http://goundertitle.blogspot.in/ http://kongupattakarars.blogspot.in/2011/03/17.html http://konguvellalagounderwiki.blogspot.in/ http://listofkonguvellalagounder.blogspot.in/ http://konguvellalagounderkanipadal.blogspot.in/

கொங்கு மண்டல சதகம் கூறும் பூசன் குலம்


ஆதண்ட மாலை தனைச்சூடிச் சோழ னகளங்கன்செய் தோதண்ட மாகச் சரம்விடுத் தானைத் துரத்தி வெட்டி நீதொண்ட மானென்று பூசைதன் கோத்திர நிலைமை கண்டு வாதொண்டமான் தொண்டமான் புகழ்சேர்கொங்கு மண்டலமே (பி..ம்) "சோழன் அகளகன் செய்", "சரம்விடுத்தான் முன் துரத்தி வெட்பு", சோழரகளங்கனுடன்', (பூசகுலம்) யோசனை புரியுந் தேவா வமுர்தத்தை யும்பருக்கு நேசமும் பூசனை செய்திட வேயுடல் நேர்பிளந்து பூசைதான் செய்பவன் பூசைதன் கோன் செம்மம் பூவெனவே வாசங் கமழ்விழி காட்டிடுவோன் கொங்கு மண்டலமே (பி..ம்) 'தேவாவமுதத்தை', 'பூசனை செய்பவன்', 'யோசனையேபுரி', 'கோன் செம்மல்'

தொண்டைமானும் வேணாடாரும்

தென்கரை நாட்டில் ஆறு கீழ்கரை ஆறு ஊர்களை ஆளும் உரிமையை பூசன் குல தொண்டைமானுக்கு அளித்து மன்னர் ஆக்கினார் வேணாடார். தொண்டைமானுக்கு வேணாடார் தன் மகளை திருமணம் செய்து கொடுத்து சீதனமாக இவைகளை வழங்கி இருக்கலாம்.மூன்று திருமணங்கள் வேணாடார் குடும்பத்துக்கும் தொண்டைமான் குடும்பத்திற்க்கும் நிகழ்ந்து உள்ளது.தொண்டைமானின் அரண்மனை சின்னக்காம்பட்டியில் உள்ளது. தொண்டைமான் மரபில் திருமலை தொண்டைமான்,ரகுநாத தொண்டைமான்,நல்லைய தொண்டைமான்,குமாரு தொண்டைமான்,அச்சுதராய தொண்டைமான்,செம்புமுனை ,நல்லதம்பி தொண்டைமான்,மன்னர் சிறை விடுராய தொண்டைமான்,மாந்தியப்ப தொண்டைமான்,சோழியப்ப தொண்டைமான்,சின்னதம்பி தொண்டைமான் ஆகிய பெயரிகள் அறிய படுகிறது.

பூசன் குலம் மேலும் சில தகவல்கள்

போர் குடியான பூச குலக் காணியூர்கள் -- பொருளூரின் பழைய பெயர் (புலரி(யூர்)-பொருளூர்) களத்தூர்,கண்டியூர்,சீர்காழி,பொருளூர்,மூலனூர்,கோமங்கை,குகைமண்குழி,வீராட்சிமங்கலம்,அல்லாளபுரம்,சர்க்கார்சாமகுலம் சர்க்கார்சாமக்குலம்,காவிலிபாளையம்,வாய்ப்பாடி,பல்லாக்கோவில்,கருவலூர்,மேட்டுக்கோவில்,வதம்பச்சேரி,Another சிறுகளந்தை,சிந்திலூப்பை,ஆனூர், ஆகிய ஊர்கள் பூசன்குலக்காணியூர்கள் ஆகும்.பூசக்குலத்தாரின் மற்றொரு காணிப்பாடல் கரூர்,நசியனூர்,பொருளூர்,பாசூர்,சம்பை,பழங்கரை ஆகிய ஊர்கள் பூசன்குலத்தாரின் காணியூர்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. காணிப்பாடல்:: தேசமது புகழ்சோழ மண்டலம் பாண்டியன் திரள்பெற்ற மண்டலமுடன் திகழ்சேர மண்டலம் கொங்குடன் மற்றுள் தேசதே சங்கள்தன்னில் பூசகுல ராசர்க்கு அரசுரிமை யாகவலர் புரிகளத் தூர்கண்டியூர் புனிதமிகு சீர்காழி புலரியூர் மூலனூர் புகழ்சேரும் கோமங்கையும் வாசமது புகழ்பெற்ற குகைமண்குழி வீராட்சி மன்னும்அல் லாளபுரியும் மருவுசாம் பக்குளம் காவிலி பாளையம் வண்மைபுரி வாய்நகருடன் விசுபுகழ் பெற்றபல் லாக்கோவில் கருவலூர் மேட்டுக் கோவில்மிகு வதம்பச் சேரிசிறுக் களந்தைசிந் திலூப்பைப்பதி விளங்கும் ஆனூருமாமே சில கல்வெட்டுகளை இங்கு பதிகிறேன்.சோழர் காலத்தின் முக்கியமான கல்வெட்டு அதாவது பல்லவர் வீழ்ச்சிக்கு பின் கீரனூர் வெள்ளாளன் பூசர்களில் அரையன் சிறியான் ஆனவேந்த சூளாமணிப்பல்லவரையன்" "கண்ணாடிப்புத்தூர் மன்றாடி பூசகரில் திருச்சிற்றம்பல முடையான் அம்மை அப்பனான தம்பிரான் தோழன்". பதினொன்றாம் நூற்றாண்டு சோழமாஹாதேவி கல்வெட்டு:"மன்றாடி பூசகரில் அரைசன் பொய்யத்தமிழ் நம்பி"

Saturday 1 February 2014

உதயேந்திர சிம்மன் 708 A.D - 790 A.D

பல்லவ அரசன் நந்தி வர்மன் பல்லவ மல்லனுடைய ஆட்சியின் இருபத்தோராம் ஆண்டிலே அவனுடைய படைத் தலைவனும் பூசன் குலத்தில் பிறந்த வேகவதியின் கரையிலுள்ள வில்வல நகரத்து குரு நில மன்னன் உதயேந்திர சிம்மன். வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் கிடைத்த உதயேந்திரம் செப்பேடுகள்வ ஆகும்.உதயேந்திரன் செப்பேடுகளில் குறிக்ப்பெறும் உதயேந்திர சிம்மன் 'பூசன்' கூட்டத்தைச் சார்ந்தவராக இச் செப்பேடு கூறுகிறது. பூசன் மாற்றுத்துறை என்பது போர் முறைகளுள் ஓன்று. உதயேந்திர சிம்மன் விண்ணப்பம் செய்ததைக் குறிப்பிடும் இடத்தில் அவன் தன் அரசனுக்கு ஆற்றிய பணிகளும் விரிவாகக் கூறப்படுகின்றன.எதிரிகளிடமிருந்து நாட்டை மீட்டுப் பல்லவ சிங்காதனத்தில் நந்திவர்மனை நிலைநிறத்தியவன் அவனே.அவனுடைய வேண்டு கோளின்படி பச்சிமாச்சரிய நதி விஷயத்தில் குமாரமங்கல வெள்ளாட்டூர் என்ற கிராமத்தை , கொற்ற கிராமம் என்ற ஊரில் இரண்டு ஜலயந்திரங்களோடு,உதயசந்திரமங்கலம் என்று புதுப் பெயரிட்டு நூற்றெட்டுப் பிராம்மணர்களுக்கு அளித்த செய்தி காணப்படுகிறது. அளிக்கப்பெற்ற கிராமத்தின் நான்கு எல்லைகள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.அதர்ம காரியங்களைச் செய்யும் வேற்றேரை நீக்கி,அந்த ஊர் அளிக்கப்பட்டது என்ற விவரமும் கூறப்பட்டுள்ளது.தானம் பெற்றவர்களின் விவரமும் விரிவாகக் காணப்படுகிறது.முடிவிலே ,சந்திரன் நட்சத்திரம் உள்ளளவும்,வானத்திலே சூரியன் சுற்றும் வரையிலும் ,மலை உள்ளளவும் பூசன் வம்சம் நிலைத்திருக்க வேண்டும்மென்று வாழ்த்துக் கூறப்பட்டிருக்கிறது.மேதாவி குலத்தில் பிறந்த சந்திரதேவன் மகன் பரமேச்வரன் என்னும் கவி அந்தப் பிரசஸ்தியை எழுதியதாகக் கூறும் செய்தியோடு சாசனம் முடிவடைகிறது. உதயேந்திர சிம்மன் சிற்பம் டாக்டர் மீனக்ஷி "காஞ்சி வைகுண்டப்பெருமாள் கோயிலில் காணும் வரலாற்றுச் சிற்பங்கள்" என்ற தொல்லியல் அய்வு நூல்லில்,உதயேந்திர சிம்மன் சிற்பம் விவரிக்கபட்டுள்ளது. 14-ஆம் கட்டத்தின் ஒரு பகுதியும் 15-ஆம் கட்டம் முழுவதும் இந்த நிகழ்ச்சிகளை(ஆதாவது பல்லவ மல்லனை உதயேந்திர சிம்மன் நந்திபுரம் முற்றுகையிலிருந்து மீட்ட நிகழ்ச்சியை)ச் சித்திரிப்பவைகளாக உள்ளன. "இவர்களுக்குப் பின்புறமாக மேலும் மூவர் நின்று கொண்டிருக்கிறார்கள்.அடிப் பகுதியில் முன் கட்டத்தைச் சேர்ந்த போர் வீரர்களில் ஜவர் அணிவகுத்துச் செல்வதே போல் உள்ளனர்.அழகனகவும் இளைஞனகவும் குதிரை மீது அமர்ந்து செல்லும் அவ்வீரன் உதயேந்திர சிம்மன் போலும்.போட்டியிடும் சித்திர மாயனுடைய சேனையை எதிர்த்துச் செல்வது போலக் காண்கிறன் அவன் ஆதாரம் பல்லவர் செப்பேடு http://www.scribd.com/doc/129542275/Pucan-Uthenyandra-Simman-Source