Sunday 2 February 2014

பூசன் குலம் மேலும் சில தகவல்கள்

போர் குடியான பூச குலக் காணியூர்கள் -- பொருளூரின் பழைய பெயர் (புலரி(யூர்)-பொருளூர்) களத்தூர்,கண்டியூர்,சீர்காழி,பொருளூர்,மூலனூர்,கோமங்கை,குகைமண்குழி,வீராட்சிமங்கலம்,அல்லாளபுரம்,சர்க்கார்சாமகுலம் சர்க்கார்சாமக்குலம்,காவிலிபாளையம்,வாய்ப்பாடி,பல்லாக்கோவில்,கருவலூர்,மேட்டுக்கோவில்,வதம்பச்சேரி,Another சிறுகளந்தை,சிந்திலூப்பை,ஆனூர், ஆகிய ஊர்கள் பூசன்குலக்காணியூர்கள் ஆகும்.பூசக்குலத்தாரின் மற்றொரு காணிப்பாடல் கரூர்,நசியனூர்,பொருளூர்,பாசூர்,சம்பை,பழங்கரை ஆகிய ஊர்கள் பூசன்குலத்தாரின் காணியூர்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. காணிப்பாடல்:: தேசமது புகழ்சோழ மண்டலம் பாண்டியன் திரள்பெற்ற மண்டலமுடன் திகழ்சேர மண்டலம் கொங்குடன் மற்றுள் தேசதே சங்கள்தன்னில் பூசகுல ராசர்க்கு அரசுரிமை யாகவலர் புரிகளத் தூர்கண்டியூர் புனிதமிகு சீர்காழி புலரியூர் மூலனூர் புகழ்சேரும் கோமங்கையும் வாசமது புகழ்பெற்ற குகைமண்குழி வீராட்சி மன்னும்அல் லாளபுரியும் மருவுசாம் பக்குளம் காவிலி பாளையம் வண்மைபுரி வாய்நகருடன் விசுபுகழ் பெற்றபல் லாக்கோவில் கருவலூர் மேட்டுக் கோவில்மிகு வதம்பச் சேரிசிறுக் களந்தைசிந் திலூப்பைப்பதி விளங்கும் ஆனூருமாமே சில கல்வெட்டுகளை இங்கு பதிகிறேன்.சோழர் காலத்தின் முக்கியமான கல்வெட்டு அதாவது பல்லவர் வீழ்ச்சிக்கு பின் கீரனூர் வெள்ளாளன் பூசர்களில் அரையன் சிறியான் ஆனவேந்த சூளாமணிப்பல்லவரையன்" "கண்ணாடிப்புத்தூர் மன்றாடி பூசகரில் திருச்சிற்றம்பல முடையான் அம்மை அப்பனான தம்பிரான் தோழன்". பதினொன்றாம் நூற்றாண்டு சோழமாஹாதேவி கல்வெட்டு:"மன்றாடி பூசகரில் அரைசன் பொய்யத்தமிழ் நம்பி"